Breaking News

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் "பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு வழங்கும் இயந்திரம்" (Self Check-in Kiosk) நிறுவப்பட உள்ளது.


திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொருத்தமட்டில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு விமான பயணிகள் நடப்பு கோடைகால அட்டவணைப்படி, புதிதாக மதியம் 2.00 மணிக்கு தினசரி மலிண்டோ ஏர் கோலாலம்பூருக்கும், இரவு 10.30க்கு ஏர் ஏசியா கோலாலம்பூருக்கும் சேவைகள் வழங்க உள்ளன. ஜெட் ஏர்வேஸானது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள (விமானத்தின் "C" வகை பராமரிப்பின் காரணத்தால்) மதியம் 3.00 மணி சென்னை சேவையையும் மீண்டும் தொடரவுள்ளது.

குறிப்பாக காலை மற்றும் நள்ளிரவு வேலைகளில் ஒரே நேரத்தில் பல விமானசேவைகள் உள்ளதால், பயணிகள் முனையத்தில் கடுமையான தேக்கநிலை ஏற்படுகிறது. புதிய பயணிகள் விமானமுனையம் கட்ட தற்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையை தற்காலிகமாக சமாளிக்க தானியங்கி பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு (Self Check-in Kiosk) இயந்திரம் நிறுவப்பட உள்ளது.

இதனால் பயண உடைமைகள் (Baggage) இல்லாத, கைஉடைமைகள் (Hand Baggage) மட்டும் வைத்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த இயந்திரத்தை பயண்படுத்தி தங்கள் புறப்பாடு உறுதிச்சீட்டை (Boarding Card) பெற்றுக்கொண்டு பன்னாட்டு பயணிகள் எனில் குடியேற்றம் (Immigration) பிரிவையோ உள்நாட்டு பயணிகள் எனில் விமானப் புறப்பாட்டுக்கு முந்தைய பாதுகாப்புச் சோதனைப் பகுதியை (Security Hold Area) அணுகலாம். பயணிகள் முனையத்தின் தேக்கநிலை முடிந்தவரையில் தவிர்க்கப்படும்.

ஜெட் ஏர்வேஸ், மலிண்டோ ஏர் மற்றும் ஏர் லங்கா விமான நிறுவனங்கள் இவ்வசதியை இவ்வியந்திரத்தின் மூலம் தங்களது பயணிகளுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

பயணிகள் சேவையில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் சேவையை முகநூல் பாராட்டுகிறது.

பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...

Read more ...

தாமிரபரணி ஆற்றிலிருந்து கோக், பெப்சி உட்பட 8 நிறுவனங்கள் நீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை..!




பருவமழை பொய்த்ததால், நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, நெல்லையில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து விட்டது. இதனால், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து தீர்ப்பளித்தது. பின், குளிர்பான நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ததையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டது இந்நிலையில், அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பெப்சி மற்றும் கோக் ஆகிய நிறுவனங்கள், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க வருகின்ற 30-ம் தேதி வரை, ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவரும், கோக், பெப்சி உள்ளிட்ட எட்டு நிறுவனங்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து, வரும் மே 1-ம் தேதி முதல் தண்ணீர் வழங்க தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் பிரச்னை சரியாகி, இயல்பு நிலை திரும்பும் வரையில் இந்தத் தடை தொடரும் என்று கருணாகரன் தெரிவித்துள்ளார்.

பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...


Read more ...

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?



உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பும் முன் இந்தத் தகவல்களைப் படியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும்.

வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை.

அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும்.

நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...

Read more ...

ஊட்டியில் அணை கட்டினால் கர்நாடகா நம்மிடம் கையேந்துமா..? வாட்சப் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!


"ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக.!" சில நாட்களாக முகநூலிலும், வாட்ஸப்பிலும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும் இது பூலோக அமைப்புக்கு பொருந்தாத செய்தி என்றும் ஒய்வு பெற்ற நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி திரு. பத்ரிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

வதந்தி

💥ஊட்டியில்_அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..!☄️

💥தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய- பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம்தான்.☄️

💥இந்த காவிரி பிரச்சனையை வைத்து தான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையானது தீர்த்து வைக்கப்பட்டு விட்டால் அரசியல்வாதிகளுக்கு வேலையே இருக்காது.☄️

💥ஆனால் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியாவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.☄️

💥ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?☄️

💥நமது தமிழ்நாட்டின் ஊட்டியில் மோயார் என்றொரு ஆறு பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த மோயார் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.☄️

💥கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது. பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.☄️

💥ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான். இதுபோலவே தமிழகம் முழுக்க உள்ள நீர்வளங்களை பாதுகாத்தாலே தமிழகம் செழிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ☄️

💥தேர்தலில் ஓட்டிற்கு பணம் வாங்குவதற்கு பதில் தயவுசெய்து இதை கேளுங்கள்...☄️

மறுப்பு

மோயாற்று நீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு தான் வருகிறது. சத்தியமங்கலம் கோட்டத்தில் தாளவாடி, ஹாசனூர் பகுதியில் சில ஓடைகள் கர்னாடகா செல்கின்றன. அந்த ஓடைகளுக்கு குறுக்கே கர்நாடகாவில் சொர்ணவதி, சிக்கஹொலே ஆகிய இரு அணைகள் கட்டியுள்ளனர். இந்த நீர் காவேரி செல்ல வேண்டிய நீர். இந்த இரு அணைகளுக்கு செல்லும் நீரை வேண்டுமானால் தடுத்து மலையை குடைந்து இந்த பக்கம் கொண்டு வந்து மோயாற்றிலும் பவானியிலும் கலக்கலாம்.

கூடலூரில் உருவாகி மேற்கு நோக்கி சில ஓடைகளும் கிழக்கு நோக்கி சில ஓடைகளும் ஓடுகின்றன. கிழக்கு நோக்கி ஓடுபவை மோயாறாக உருவாகுகின்றன. மேலும் சிங்காரா பவர் அவுஸ் நீரும் மோயாற்றில் கலக்கின்றன. இது முழுவதும் தமிழ்நாட்டில் ஓடி பவானி சாகர் அணையில் கலக்கிறது.

மேற்குப்பக்கம் ஓடும் ஓடைகள் கேரளா சென்று விடுகின்றன. இதைத்தான் தடுக்க பாண்டியாறு பொன்னம்புழா திட்டம் தீட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

தமிழ்நாட்டின் பூளோக அமைப்பை கூட தெரியாமல் ஆளாளுக்கு தவறான ஒரு விஷயத்தை நம்புகிற மாதிரி உருவாக்கி அதை பரப்புவது.. ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை என தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...

Read more ...

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி குற்றங்களுக்கான புதிய அபராதப் பட்டியல்..!

மக்களவையில் நிறைவேறியுள்ள புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் உள்ள அடிப்படை சாராம்சங்கள் என்ன என்பது குறித்த தகவல்களை காணலாம்.


புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின்படி உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தில் உள்ள சாராம்சங்கள் பற்றி முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.

கடந்த, 1989ம் ஆண்டு இந்திய மோட்டார் வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டது. அதன் பிறகு, 28 ஆண்டுகளாக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சாலைகளிலும், வாகன எண்ணிக்கையிலும் ஏராளமான மாற்றங்கள் வந்து விட்டன. இதற்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.

மோட்டார் வாகன திருத்தங்கள் மசோதா 2016, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நாடாளுடன்றத்தில் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த நிலைக்குழு, மசோதாவில் பல மாற்றங்களை பரிந்துரைத்தது. அந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் பேரில் தற்போது வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேறியுள்ளது.

மசோதா நிறைவேறிய பிறகு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின் கட்கரி "போக்குவரத்து துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும். 100 சதவீத மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும். மேலும், மின்னணு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தால், போலி ஓட்டுனர் உரிமங்களை தயாரிக்க முடியாது. மேலும், வாகன திருட்டும் நடைபெறாது" என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டதிருத்த மசோதாவில், சாலை விதி மீறல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களையும் குறைக்கலாம் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சாலைவிபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம், 10 மடங்கு இழப்பீடு கிடைக்கவும், வாகனங்கள் ஓட்டி பிடிபடும் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தும் மைனர் சிறுவர்களின் பெற்றோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின்படி எந்த வகையான குற்றங்களுக்கு எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்படும் என்ற விவரத்தை கீழ்கண்ட பட்டியலில் காணுங்கள்...

  • சாலை விதிகளை மீறுதல் - ரூ.500 அபராதம் 
  • உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் - ரூ.5,000 
  • அதிவேகமாக கார் ஓட்டுதல் - ரூ.2,000 
  • மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் - ரூ.10,000 
  • ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டுதல் - ரூ.1,000
  • ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் சென்றால் - ரூ.10,000

இதேபோல, சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும். மேலும் கூடுதல் இழப்பீட்டு தொகையை உயிரிழப்பு ஏற்பட காரணமான வாகன உரிமையாளரிடம் பெறும் வகையில் ஓட்டுனர் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத வாகனங்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு அளிக்கும் வகையில் புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேக்ஸி சேவைக்கான உரிமத்தை இதுவரையிலும் அந்தந்த மாநிலங்களின் வரைமுறைகள்படி வழங்கப்பட்டு வருகின்றன. இனி, மத்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படியே மாநில அரசாங்கங்கள் டேக்ஸி உரிமம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து வழக்குகளில் நீதிமன்றங்கள் அறிவிக்கும் இழப்பீட்டு தொகை, மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையின் அதிகபட்ச அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் மிச்சத் தொகையை யாரிடம் வசூலிப்பது என்பது குறித்து இந்த மசோதாவில் தெளிவான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.

பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...

Read more ...

ஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா..?


வெளியூருக்கு செல்லும் போது நம் வீட்டில் எத்தனை நாள், எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.

ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே முகநூல் ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.

உணவு பதப்படுத்தல்

சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், கறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

சால்மோனெல்லா

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?

நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.

4 மணிநேரம்

மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.

ஃப்ரீசரில் வைத்த உணவு

ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

சோதிக்கும் முறை:

ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

முடிவு

நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவே கூடாது.


பிடித்திருந்தால் ஒரு 'LIKE' போடுங்க...

Read more ...

தீ விபத்தா..? கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்..!

சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அச்சமயங்களில், என்னென்ன முன்னெச்சரிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமா...?

* உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்.

* தரமான, மடிக்கக்கூடிய ஏணிகளை தயாராக வைத்திருப்பது நல்லது.

* ஜன்னல் கதவுகளை உடனடியாக திறந்து வையுங்கள்.

* திரைச்சீலைகள் சட்டென்று கழற்றப்பட கூடியதாக இருக்கட்டும்.

* உங்கள் வீட்டில், இருட்டில் ஓரிரு முறை நடந்து பழகுங்கள். அதாவது, எந்தெந்த வழிகளில், நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்பது, இருட்டிலும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* வீட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கு, தரமான ஒயர்களை பயன்படுத்துவது அவசியம்.

* உள்ளூர் தீயணைப்பு நிலையம் எங்குள்ளது என்பதையும், அதன் தொலைபேசி எண்ணையும் தெரிந்து கொள்ளுங்கள்.

* வீட்டிலோ, அருகிலோ தீயணைப்பு கருவி இருந்தால், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை, முன்னதாகவே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

* தீப்பற்றி எரியும் போது, தவழ்ந்தபடியே வெளியேறுங்கள். ஏனெனில், அடர்ந்த புகையும், நச்சுக்காற்றும், மேற்புறம் தான் அதிகமிருக்கும்.

* வெளியேறும் இடத்தில் புகை சூழ்ந்திருந்தால், மற்றொரு வழி இருந்தால், அவ்வழியே வெளியேறுங்கள்.

* முகத்தை, ஈரமான துணியால் மூடியபடி வெளியேறவும்.

* தீப்பிடித்த வீட்டிலிருந்து வெளியேற, கனமான பெட்ஷீட்டை, உடல் முழுவதும் சுற்றியபடி வெளியேறவும்.

* உங்கள் துணியில், தீப்பற்றி விட்டால், உங்கள் முகத்தை, கைகளால் மூடியபடி, கீழே படுத்து, இப்படியும், அப்படியும் உருளுங்கள்.

* வேறு யாருடைய உடையிலாவது தீப்பற்றிக் கொண்டால், அவர் மீது, தண்ணீரை ஊற்றுங்கள்.

* வெளியேறும் போது, கதவை திறப்பதற்கு முன், கைப்பிடியை தொட்டுப் பாருங்கள்; அது சூடாக இருந்தால், கனமான துணியால் பிடித்து, திறக்கவும்.

* தீப்பிடித்த சமயத்தில், நீங்கள் வெளியேறும் முயற்சியில், எந்த கதவை திறப்பதாக இருந்தாலும் முதலில், சிறிதளவு திறந்து பாருங்கள். மறுபுறம் தீயோ, அடர்ந்த புகையோ தெரிந்தால், சட்டென்று மூடிவிடவும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக பதற்றப்படாமல் அங்கிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை மட்டுமே சிந்தித்து, செயல்பட வேண்டும்.

* வீட்டில் எப்போதும் ஒரு டிரம் நிறைய தண்ணீர் இருக்கட்டும்.

* தீ விபத்து ஏற்பட்டவுடன், உங்கள் வீட்டிலுள்ள காஸ் சிலிண்டர் கனெக் ஷனை எடுத்து விடுங்கள்; முடிந்தால் சிலிண்டரை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து விடவும்.

* மின்சார பியூஸ் கேரியரை கழட்டி விடுங்கள்.

* டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களின் பிளக்கை உடனடியாக கழட்டி விடுங்கள்.

* உடைந்து போன மரச்சாமான்கள், மெத்தை, நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற வேண்டாத குப்பைகளை அவ்வப்போது ஒழித்துக் கட்டுங்கள். வருமுன் காப்பது நல்லது.
Read more ...

5 வகையான ‘ஸ்மார்ட்’ கார்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்.. ஏப்ரல் 1–ந்தேதி முதல் வினியோகம்..!


ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு


தமிழகம் முழுவதும் வருகிற 1–ந்தேதி முதல் தற்போது உள்ள ரே‌ஷன்கார்டுகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ என்கிற புதிய ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி ரே‌ஷன்கார்டுதாரர்களிடம் ஏற்கனவே அந்தந்த நியாயவிலைக்கடைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
புதிதாக வழங்கப்பட இருக்கும் ஸ்மார்ட் கார்டு ‘பான்’ கார்டு வடிவில் இருக்கும். இதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரையுடன் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை என்ற எழுத்துக்களும், அதற்கு கீழ் குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் தனி குறியீட்டு எண் முகவரி போன்றவையும், பின்புறத்தில் குடும்ப உறுப்பினர்கள் பெயர், ரே‌ஷன் கடை எண், ஆண்டு மற்றும் கியூ. ஆர் என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில் இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக்கூடாது என எழுதப்பட்டு இருக்கும்.
ஐந்து வகை


இந்த ஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளாக வெளியிடப்பட இருக்கிறது.

கார்டில் புகைப்படம் அருகில்....

  • பி.எச்.எச்.– ரைஸ் என்றிருந்தால் அனைத்து பொருட்களும் கிடைக்கும். 

  • பி. எச்.எச். – ஏ என்றிருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்து பொருட்களும் தரப்படும். 

  • என்.பி.எச்.எச். என மட்டும் இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். 

  • என்.பி.எச். எச். –எஸ் என இருந்தால் சர்க்கரை மட்டும் வழங்கப்படும். 

  • என்.பி.எச்.எச்.– என்.சி. என்றிருந்தால் எந்த பொருட்களும் வழங்கப்பட மாட்டாது.
Read more ...
Copyright © 2017.. Muhanool